1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மதுரை உட்பட 3 மாவட்டங்களில் RSS பேரணி நடத்த அனுமதி மறுப்பு..!

1

தென் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு காவல்த்துறை அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 14ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக இந்த மனுவின் மீது அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து விரிவான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வரும் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பசும்பொன் தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் உள்ளதால் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறையால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தர முடியாது என்றும் மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பேரணியை நடத்திக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Trending News

Latest News

You May Like