#BREAKING: நாடு முழுவதும் ரூ.2,000.. வங்கிக்கணக்கில் டெபாசிட்..!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) திட்டம் மத்திய அரசால் 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நலிவடைந்த விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் என 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகளாக தொகை வழக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தற்போது 20வது தவணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 19வது தவணை மூலம் 10, 04, 67,693 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. PM கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பெற விவசாயிகள் தங்கள் e-KYC ஐ பூர்த்தி செய்யவும், தகுதியை சரி பார்க்கவும், பயனாளி நிலையை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள்?
இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்சிறு அல்லது குறு விவசாயியாக இருக்க வேண்டும்விளைச்சலுக்கு ஏற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் ஓய்வூதியம் பெற கூடாது.2 ஹெக்டேர் மற்றும் அதற்கு கீழ் சாகுபடி செய்யக்கூடிய நிலம் இருக்க வேண்டும்.வருமான வரித்தாக்கல் செய்பவராக இருக்கக்கூடாதுநிறுவன நில உரிமையாளராக இருக்கக்கூடாது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் 20வது தவணையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 02) விவசாயிகளுக்கு விடுவித்து தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.20,500 கோடி 9.7 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது