BREAKING: பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி..!
மக்களவை தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது..
மக்களவை தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் விதமாக 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ளார். அதில், 'காலியாக உள்ள ஒன்றிய அரசு பணிகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம். அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் 2 மடங்கு அதிகரிப்பு. ஊராட்சிக்கு ஒரு பெண் பணியாளர் மற்றும் பெண்களுக்கான விடுதி' என்பவை இடம்பெற்றுள்ளது.