#BREAKING : இந்திய வீரருடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்..!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்த சுக்லா தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 7 முறை இந்த விண்வெளி பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு SpaceX-ன் Falcon 9 ராக்கெட், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்வெளியில் 14 நாள்கள் பூமியை சுற்றி வருவார் சுக்லா.
பால்கன் 9 ராக்கெட். நாளை மாலை 6:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா விண்வெளி செல்கிறார்