1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: என்.எல்.சி பணிகளைத் தொடங்கினால் கடலூர் முழுவதும் சாலை மறியல் நடத்தப்படும் : அன்புமணி ராமதாஸ்..!

1

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக, பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. வளையமாதேவியில் 2 மாதத்திற்குள் அறுவடை செய்யவிருந்த நெற்பயிர்களை ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, என்.எல்.சியின் விரிவாக்க பணியினை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவல்துறையை ஏவி நிலத்தைக் கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டின் மண்ணையும் மக்களையும் என்.எல்.சி நிர்வாகம் அழித்துக் கொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விட பல மடங்கு ஆபத்தானது நெய்வேலி நிலக்கரி சுரங்கம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியான 36 ஆயிரம் மெகா வாட்டில், ஒரு நாளைக்கு 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தேவை. இந்நிலையில், மின் மிகை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் வெறும் 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி என்.எல்.சி தேவையா, என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், விவசாயிகளை வஞ்சித்து விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் என்.எல்.சி நிறுவனம் பணிகளை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்தால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாமக சார்பில் சாலை மறியல் நடத்தப்படும் என்று எச்சரித்த அன்புமணி, மாவட்டமே ஸ்தம்பிக்கும் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like