#BREAKING : காலையில் உயர்வு மாலையில் சரிவு..! ஒரே நாளில் ஏற்றம் இறக்கம் கண்ட தங்கம் விலை..!
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டு வந்த நிலையில், இன்று காலை புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், மாலையில் விலை கணிசமாகக் குறைந்து, நகைப்பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது.ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,550க்கும், வெள்ளி விலை கிராமுக்கு காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கும் விற்பனையாகிறது.