1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட மேலும் 4 வாரம் தடை..!

Q

விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த 'வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வீர தீர சூரன்'சூரன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கான தடையை டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும்’, ‘சித்தா’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள புதிய படம் ‘வீர தீர சூரன்’. விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கல்லூரி பாடலும், டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் இன்று (27ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்நிலையில், ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட தடைகோரி Ivy entertainment என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. படத்திற்கு நிதியுதவி வழங்கி, பெருவாரியான உரிமையைப் பெற்றுள்ள தங்களிடம் உரிய எழுத்துப்பூர்வ உத்தரவுகள் பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி உள்ளது.

தமிழ் படத்தின் literary உரிமை, இசை வேலைகளுக்கான உரிமை, இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளில் வெளியீடு, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வெளியீடு உள்ளிட்டவை தொடர்பாகத் தங்களுடனான ஒப்பந்தங்களைப் படக்குழு மீறி உள்ளதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும், திட்டமிட்டபடி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திரைப்படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்புகளைப் படக்குழு வெளியிட்டுள்ளதாகவும் Ivy நிறுவனம் புகார் கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி, படத்தின் மீதான தீர்ப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஆர் பிக்சர்ஸ் - ஐவிஒய் நிறுவனத்துடன் சமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சிக்கலை தீர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like