1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் சேரலாம் : எடப்பாடி திடீர் அழைப்பு..!

1

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேரலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ' “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு ! கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். 

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் சேரலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலந்தொட்டே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like