#BREAKING : கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்..!
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் நடைபெறவில்லை.
இந்நிலையில், இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதனால், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.