#BREAKING : இந்த 2 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை நியாய விலைக்கடைகளில் வாங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நவம்பர் 5 மற்றும் 10 ஆகிய விடுமுறை தினங்களில் இயங்கும் என்று உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.490 வங்கிகளில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.