#BREAKING : கண்ணீர் கடலில் ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு..!
இந்தியாவின் பிரபலமான மற்றும் இந்தியத் தொழில்துறையில் தவிர்க்க முடியாத முக்கிய தொழிலதிபராக இருந்தவர் ரத்தன் டாடா. இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக முப்பையில் காலமானார். அவருக்கு வயது 86. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ரத்தன் டாடாவின் மறைவையொட்டி இன்று ( அக்.10) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் மஹாராஷ்டிரா அரசு அறிவித்தது.
இந்நிலையில் மும்பை வோர்லி மயானத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச் சடங்கு நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.