#BREAKING : ராதிகா சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி..;
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலுமே சாதித்து காட்டிய நடிகை தான் ராதிகா.
மேடைப் பேச்சில் அப்பா எம் ஆர் ராதா, அண்ணன் ராதாரவி இரண்டு பேரை போலவே திறமைசாலி. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சமயத்திலேயே ராதிகாவின் அரசியல் பேச்சை பார்த்து அசந்தவர்கள் அதிகம்.
நடிகை ராதிகா சரத்குமார் "டெங்கு" காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக ராதிகாவின் மேலாளர் கண்ணதாசன் தகவல் தெரிவித்துள்ளார்.