1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :கே. என். நேருவின் சகோதரரை அழைத்துச் சென்ற ED!

Q

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் நடத்தி வரும் TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, கோவை, திருச்சி உட்படத் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

கோவையில் உள்ள TVH அலுவலகம் மற்றும் மசக்காளிபாளையத்தில் உள்ள TVH அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று (ஏப். 7) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரை விசாரிக்க, சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள வீட்டில் இருந்து, அதிகாரிகள் அவரை, தற்போது காரில் அழைத்துச் சென்றனர். TVH நிறுவன அலுவலகங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like