#BREAKING : புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று போன் செய்து பேசிய நபர் திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை புழல் மத்திய சிறை, திருச்சி மத்திய சிறை, மதுரை மத்திய சிறை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக கூறி போன் இணைப்பை துண்டித்தார்.
இந்த தகவலை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை சார்பில் சம்பந்தப்பட்ட சிறைத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை புழல் சிறையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்ட சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்சி மற்றும் மதுரையில் உள்ள மத்திய சிறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை புழல், திருச்சி, மதுரை மத்திய சிறைகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.