#BREAKING : புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கைது..!

காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை
பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், அவரை கைது செய்ய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரனை ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார்
இவ்விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
ஜெகன் மூர்த்தியை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல்
கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்