#BREAKING : பிரபல தயாரிப்பாளரின் மகள் திடீர் மரணம்..!
நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமார் 1995 ஆம் ஆண்டு வெளியான பேவபா சனம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். அவர் தனது மருமகன் பூஷன் குமாருடன் இணைந்து டி-சீரிஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இருவரும் இணைந்து லக்கி: நோ டைம் ஃபார் லவ், ரெடி, டார்லிங், ஏர்லிஃப்ட் மற்றும் சத்யமேவ் ஜெயதே உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்துள்ளனர்.கிரிஷன் குமார் மகளான திஷா குமார் செப்டம்பர் 6, 2003ஆம் ஆண்டு பிறந்தார். திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
நீண்ட நாட்களாக கேன்சரால் போராடிக்கொண்டிருந்த திஷா குமார் நேற்று உயிரிழந்தார். இவரின் அகால மரணம் குறித்து குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அவர், புற்று நோயுடன் போராடி வந்தார். அதற்கான சிகிச்சை எடுத்து வந்த போதும், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இந்த கடினமான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமை மதிப்பளிக்க வேண்டும். இந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மகளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடந்த நவம்பர் மாதம், ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு தனது தந்தையுடன் சேர்ந்து படம் பார்த்தார்.