1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..!

1

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் அங்கு மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் முடிவுகளில் ராகுல் இந்தியாவின் ஒரே வேட்பாளராக இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.

ராகுல் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்தாக வேண்டி உள்ளது. இந்த இரண்டில் எதை அவர் ராஜினாமா செய்வார் எனவும், அதில் போட்டியிடப் போவது யார் என்பதும் பேசுபொருளாகி வருகிறது. 

இந்நிலையில், தீவிர ஆலோசனைக்குப் பின்னர், ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியைத் தற்போது ராஜினாமா செய்யவிருப்பதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். மேலும், ராகுல் ராஜினாமா செய்யவிருப்பதால் காலியாகவிருக்கும் வயநாடு தொகுதியில், ராகுலின் தங்கையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடவிருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரியங்கா காந்தி இது குறித்து, ``வயநாடு தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தொகுதி மக்களுக்காகப் பாடுபடுவேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளும் எனக்கு மிகவும் நெருக்கமானவை. வயநாடு மக்களுக்காக நானும் என்னுடைய சகோதரி பிரியங்காவும் எப்போதும் குரல் கொடுப்போம். வயநாட்டுக்கு அடிக்கடிச் செல்வேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.
 

Trending News

Latest News

You May Like