BREAKING இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு !
BREAKING இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு !

இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஃப்ளோர்ஸ் தீவுப்பகுதியில், கடலுக்கடியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தில் (Pacific Ring of Fire) இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.
கடந்த 2004ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட 7.5 சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதன் விளைவாக எழுந்த சுனாமி அலைகளும் 4,300க்கும் மேலானோரை பலியாக்கின.
newstm.in