#BREAKING : பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் காலமானார்..!
மருதாணி சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நேத்ரன். பாக்கியலட்சுமி சீரியல் வரை ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களில் வில்லனாக நெகட்டிவ் ரோல்களில் நடித்து மிரட்டியவர். ஒரு சில படங்களிலும் துணை நடிகராக நேத்ரன் நடித்துள்ளார்.
நடிகர் நேத்ரனின் மகள்களும் சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் நிலையில், சமீபத்தில் தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.