1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை..!

Q

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போது போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி துரை மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை, வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இன்று அவரை பிடிக்க சென்றுள்ளனர்.
ரவுடி துரையை போலீசார் பிடிக்க முயன்ற போது, போலீசாரை ரவுடி துரை தாக்கியதாகவும், பாதுகாப்புக்காக போலீசார் அவரை நோக்கி துப்பாக்கிகள் சுட்டதாகவும் முதல் கட்டத்தை தகவல் வெளியாகி உள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது நான்கு கொலை வழக்குகள் உட்பட 70 வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like