#BREAKING: பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு..!
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பச்சரிசி, வெல்லம், இதர பொருள்கள், கரும்பு ஆகியவை வழங்கப்படும். அத்துடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும். பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஒவ்வொரு விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் வந்த பொங்கல் பண்டிகையின் போது (2022) பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டுமல்லாமல் மளிகை பொருள்களும் இடம்பெற்றிருந்தன. ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை.
இதில் சுதாரித்துக் கொண்ட தமிழக அரசு 2023, 2024 ஆகிய இரு பொங்கல் பண்டிகையின் போது ரொக்கம் ரூ.1000, பச்சரிசி 1 கிலோ, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்ட்டது. அத்துடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டன.
அதன்படி, இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேசன் கடைகளிலும் இதனை பெறலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.