#BREAKING : அரசியலில் திருப்பம்..! தவெக அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜூனா, அதிமுக நிர்வாகி நிர்மல்குமார்..!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஆதவ் அர்ஜூனா விலகி இருந்தார். அவர் விரைவில் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக ஐடி பிரிவு இணை செயலாளராக உள்ள நிர்மல் குமார் தவெகவில் இணைய இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது.
அதன்படி சுமார் 12 மணி அளவில் அதிமுக நிர்வாகியான நிர்மல் குமார் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஏற்கனவே நிர்மல் குமார் பாஜகவில் ஐடி விங் பிரிவில் இருந்து விலகி அதிமுகவில் ஐடி விங் பிரிவில் இணைந்தார். அதிமுக ஐடி பிரிவில் இணை செயலாளர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக நிர்வாகியான நிர்மல்குமார் தனது சமூக வலைத்தளத்தில் உள்ள அதிமுக சின்னங்களை நீக்கி உள்ளார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை வாசலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.