1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :இனி தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வசூலிக்க முடியாது..!

Q

மக்களுக்கு இல்லை. தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமைகளும் மீறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது எனவும் அது சட்டவிரோதம் என்றும் அவர்கள் தீர்ப்பு வழங்கினர்.
மேலும் தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள், தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக அமையும்.நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது, அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம் என தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் முதலில் கருத்துகளை தெரிவித்தனர்.
தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்கள் விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும் .ஒரு நபர், நிறுவனம், எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம் என திட்டத்தில் வழி வகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என சொல்லி, தேர்தல் பத்திரங்களை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு. தாமதமாக வந்துள்ள தீர்ப்பு உது என்றாலும், இனி, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வசூலிக்க முடியாது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் கறுப்பு பணத்தை ஆளும் கட்சிக்கு கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like