#BREAKING : பிரதமர் மோடி செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!
ஜார்க்கண்டில் பிரதமர் மோடி செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
பிரதமர் மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு மோடி புறப்பட இருந்தார். இந்நிலையில், அவரின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தியோகர் விமான நிலையத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தியோகர் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த பிரதமர் ஜார்க்கண்டிலிருந்து டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது