1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பின்னணிப் பாடகி கல்பனா தற்கொலை முயற்சி..!

Q

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து திரையுலக ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானவர் பாடகி கல்பனா.

இவருடைய தந்தை டி.எஸ்.ராகவேந்திரா மிக சிறந்த பாடகர் மட்டும் இன்றி சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகர். இவருடைய தாய் சுலோச்சனா சிறந்த பாடகி. கல்பனா சிறு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் பழகியவர். மேலும் இவருடைய சகோதரியும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்பனா முதல் முறையாக 1991 ஆம் ஆண்டு 'என் ராசாவின் மனசிலே' படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு... என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். 

இந்த படத்தை தொடர்ந்து 'தாஜ்மஹால்' , 'மாயாவி', 'மழை', 'ஆறு' உள்ளிட்ட 50 மேற்பட்ட படங்களில் மனதை வருடும் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தமிழ் மொழியை விட தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் பாடகி கல்பனாவுக்கு சிகிச்சை

Trending News

Latest News

You May Like