1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள்..!

1

வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை.இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் அமர்ந்தபடியே பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிய நிலையில், கடும் ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர் மீது சேற்றை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் பழனி மீதும் சேற்றை வீசியுள்ளனர். தொடர்ந்து காரில் இருந்து இறங்கி மக்களின் குறைகளை கேட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Trending News

Latest News

You May Like