1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அடுத்தடுத்து ஹாஸ்பிடலில் குவியும் மக்கள்..! சென்னை பிலால் ஹோட்டலுக்கு சீல்...!

1

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது..சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் பிரியாணி உணவகத்திற்கு உணவ பாதுகாப்புத்துறை சீல் வைத்தது..


பிரபலமான இந்த உணவகத்தில் ரம்ஜான் அன்று, 2 கல்லூரி மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து உணவருந்தி உள்ளனர். இவர்கள் இருவரும் மட்டன் குழம்பு சாப்பிட்டதாகவும் அதற்கு பிறகு இவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். , இதுதொடர்பாக ராயப்பேட்டை மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதே போல் ரம்ஜானுக்கு முதல் நாள் இங்கு பீப் சாப்பிட்ட 18 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதில் சிலருக்கு தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், அவர்கள்  தண்டையார்பேட்டை காலரா  மருத்துவ மனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருவல்லிக்கேணியில் செயல்படும் பிலால் பிரியாணி என்ற ஓட்டல் முன்பு திரண்டு முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். ஆனால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக புகார் அளிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து தற்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் விற்கப்பட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் பிலால் பிரியாணி உணவகத்திற்கு உணவ பாதுகாப்புத்துறை சீல் வைத்தது. திருவல்லிக்கேணி பிலால் உணவகத்தில் பிரியாணி மற்றும் சவர்மா சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்


 

Trending News

Latest News

You May Like