#BREAKING : எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் (IB) சனிக்கிழமை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பாகிஸ்தானிய ஊடுருவல்காரரை வீழ்த்தியது. மே 23 ஆம் தேதி இரவு சந்தேகத்திற்கிடமான ஒரு நபரின் நடமாட்டத்தை BSF வீரர்கள் கண்டறிந்தனர்.
எச்சரிக்கை விடுத்த போதிலும், பாகிஸ்தான் பயங்கரவாதி தொடர்ந்து முன்னேறினார். "சர்வதேச எல்லையைத் தாண்டிய பிறகு எல்லை வேலியை நோக்கி சந்தேகத்திற்கிடமான ஒருவர் முன்னேறுவதை BSF பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அவர்கள் ஊடுருவும் நபருக்கு எச்சரிக்கை விடுத்தனர், ஆனால் அவர் தொடர்ந்து முன்னேறினார். இதையடுத்து, அந்த பயங்கரவாதி மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான் என எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
