1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகல் : ஓபிஎஸ் தலைமையிலான குழு அறிவிப்பு..!

1

"தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த உறவை முடித்து கொள்கிறோம்" - பண்ருட்டி ராமச்சந்திரன்

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு; "பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது நாடே அறியும்" - தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி;

 

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக- அதிமுக கூட்டணி அமைந்ததை அடுத்து, ஓபிஎஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், விஜய்யுடன் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் நீடிக்கவோ, விலகவோ நிர்வாகிகளிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது;

3 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்;

1. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொஉமீகுழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று முதல் தொஉமீகுழு தனது உறவை முறித்துக்கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொஉமீகுழு இடம்பெறாது.

2.ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

3.எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது தற்போது இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.  

Trending News

Latest News

You May Like