#BREAKING :- வடமாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!
கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னரை போலீஸ் மடக்கியபோது, 6 கொள்ளையர்கள் தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். கண்டெய்னரில் இருந்தது, கேரள கொள்ளை பணம் எனத் தெரிய வந்துள்ளது.
திருச்சூரில் இன்று (செப்., 27) அதிகாலை 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பலை தமிழ்நாடு போலீசார் அதிரடியாக சுட்டுப்பிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே வாகனங்களில் மோதிவிட்டு தாறுமாறாக ஓடிய லாரியை சேசிங் செய்து துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் லாரி ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். வடமாநில இளைஞர்கள் 5 பேர் உயிருடன் பிடிபட்டனர. இவர்கள் ராஜஸ்தான் கொள்ளை கும்பல் என்பது தெரியவந்துள்ளது.