#BREAKING : சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார்!
எழுத்தாளர், நடிகர், நாடகாசிரியர், வழக்குரைஞர், அரசியல் விமர்சகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், எனப் பன்முக ஆற்றலாளர் சோ.ராமசாமி 2016ம் ஆண்டு சென்னையில் மாரடைப்பால் காலமானார். சோவுக்கு செளந்தரா என்ற மனைவி, ஸ்ரீராம் என்ற மகன், சிந்துஜா என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவரது மனைவி சவுந்திரா ராமசாமி, காலமானார்.உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக நேற்றிரவு (ஆக. 19) சௌந்தரா ராமசாமி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.