#BREAKING : நோபல் பரிசு அறிவிப்பு : 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் மருத்துவத் துறையில் அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவருக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பியர் அகோஸ்டினி, பெரென்க் க்ராஸ்ஸ், அன்னே எல்’ஹுல்லியர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இவர்கள் பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காகவும் ஒளியின் ஆட்டோ செகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனையை மேற்கொண்டதற்காகவும் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.