#BREAKING : நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சென்னை நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என கூறினார். சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பு, பொதுக் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ 8 லிருந்து ரூ 5.50 காசாக குறைக்கப்படுகிறது. அதாவது 10 வீடுகளுக்கும் குறைவாக 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என கூறினார்.
மேலும் சென்னையில் இருக்கக்கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் என நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.