1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை : தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்..!

1

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. களம் காண்கிறது. தேர்தலில் போட்டியிடும் 10 பா.ம.க. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட்டு உள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் கலந்துகொண்டு பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

  • நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்
  • அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்படும்
  • ₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
  • மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம் • மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்
  • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். அதே போல் இந்தியா முழுவதும் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • பெண்கள் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்படும்
  • மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு
  • நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு
  • திருக்குறள் தேசிய நூலாக்க பரிந்துரை
  • மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.3000ஆக உயர்த்தப்படும்.
  • ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி 10% ஆண்டுக்கு வழங்க வலியுறுத்தப்படும்.
  • கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
  • உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
  • சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 6000-லிருந்து ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
  • நியாவிலைக்க கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
  • பொதுத்துறையில் வங்கியில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி
  • மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்.
  • கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

Trending News

Latest News

You May Like