#BREAKING : இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருந்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து அதிமுகவின் நிலை என்ன என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தேர்தலில் அதிமுக போட்டியிடப்போவதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.