#BREAKING : ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை..!!
கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டம் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் குறையுமா, கடன் வாங்கியவர்களுக்கு மேலும் கடன் குறைப்பு இருக்குமா, வட்டி விகித முடிவுகள் எப்படி பொருளாதார நிலை, பணவீக்கம், பங்குச் சந்தை உட்பட முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி, இன்று நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளன. RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான பணவியல் கொள்கைக் குழு (MPC) ஆகஸ்ட் 4, 2025 அன்று தொடங்கி, இன்று ஆகஸ்ட் 6 முடிவடைகிறது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகித மாற்றம் குறித்து அறிவிக்கப்படும்.
ஜூன் மாத ரிசர்வ் வங்கி கொள்கையில், மத்திய வங்கியின் MPC, ரெப்போ விகிதத்தை 6% இலிருந்து 5.50% ஆக 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துயது.
ரெப்போ வட்டி விகிதம் இம்முறை குறைந்தால் அது வீட்டுக்கடன், கார் கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய லக் என்றே கூறலாம். அதேசமயம் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் பொருளாதார நிலை, சந்தை மந்த நிலை போன்ற பாதகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து வெளியேறிய பின்பு சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் முதல் நிகழ்வாக இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.
.png)