#BREAKING : பாஜகவுடன் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்..!
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி;கூட்டணி குறித்த முடிவுகளை உரிய நேரத்தில் எங்கள் கட்சித் தலைவர் எடுப்பார் என தவெக துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக இணையலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள நிர்மல்குமார், பாஜக தங்களின் கொள்கை எதிரி என கூறியுள்ளார்.