#Breaking News இந்த மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிப்பா !!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ;
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 365 (இன்று மட்டும் -82) ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
தமிழகத்தில் கூடுதலாக 3 ஆய்வகங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 31 ஆய்வகங்கள் உள்ளன.
ஆய்வக வசதியை அதிகப்படுத்தி பரிசோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று ஒரு நாளில் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சென்னையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் பாதிப்பு.
Newstm.in