#BREAKING: புதிய ஆளுநர்கள் நியமனம்..!
பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை அடுத்து மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு ஒடிசா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பீகார் கவர்னராகவும் பீகார் கவர்னராக இருந்த ராஜேந்திர அர்லேகர் கேரளா கவர்னராகவும் மாற்றப்பட்டனர்.
மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர்கள்
ஒடிசா - ஹரிபாபு
மிசோரம் - முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்
கேரளா - ராஜேந்திர அர்லேகர்
பீகார் - ஆரிப் முகமது கான்
மணிப்பூர் - அஜய் குமார் பல்லா