1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நீட் ரிசல்ட் வெளியானது..! எப்படி பார்க்கலாம்?

Q

நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற இந்த நீட் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.

 

இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது.

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.

இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

தேர்வு முடிவுகளைப் எப்படி பார்க்கலாம்?

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

முதலில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ कंĖ ល់លលុប់.

A "NEET UG 2025 Result" இணைப்பைக் கிளிக் செய்யவும்.

திரையில் தோன்றும் புதிய பக்கத்தில், உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல்லை (Password) உரிய இடத்தில் டைப் செய்து சமர்ப்பிக்கவும்.

இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் பிடிஎஃப் வடிவில் திரையில் தோன்றும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like