#BREAKING : மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியானது - நாமக்கல் மாணவன் முதலிடம்..!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிடுகிறார்.
ஆக.21ம் தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
தரவரிசை பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த ரஜினீஷ் 720/720 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல், 2ஆவது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3ஆவது இடத்தை சென்னை மாணவி ஷைலஜா பிடித்துள்ளனர். மேலும், 7.5% அரசு இட ஒதுக்கீட்டில் சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்த மாணவி ரூபா முதலிடம் பிடித்ததாக, அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.