1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING பண்டிகை காலங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி !

#BREAKING பண்டிகை காலங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மோடி !


பண்டிகை காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சேவையே சிறந்த தர்மம் என்றும் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோயின் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பலமுறை உரையாற்றி வந்தார்.

இந்தியாவில் தற்போது பருவமழை மற்றும் ஊரடங்கு தளர்வு மற்றும் பண்டிகைகாலம் போன்றவைகளால் கொரோனா 2-வது அலை பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் 7-வது உரையாற்ற உள்ளார் அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாலை 6 மணிக்கு எனது மக்களிடம் ஒரு செய்தியை பகிர உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் சொன்னபடி மாலை 6 மணிக்கு தனது உரையை ஆரம்பித்தார். அதில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளி கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்தியாவில் கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையில் நாடும், மக்களும் வெற்றி பெற்றுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சம் புதிய படுக்கை வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கொரோனா தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. புதிதாக 2 ஆயிரம் புதிய பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளை ஒப்பிடும்போது, நமது நாட்டில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. எனவே, நாம் எப்போது எல்லாம் பொது வெளியில் செல்கிறோமோ அப்போது எல்லாம் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதை பார்க்க முடிகிறது. நாம் அலட்சியமாக இருக்க கூடாது. அப்படி சிலர் அலட்சியமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.எதிரியையும், நோயையும் நாம் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது. தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரை மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுக்கு எதிரான போரை நாம் வலுவிலுக்கச் செய்துவிடக்கூடாது.

நாட்டு மக்கள் அனைவரும் நலமாக வாழ்வதை நான் காண விரும்புகிறேன். கொரோனா ஒழிந்துவிட்டதாக மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. ஊரடங்கு முடியலாம். ஆனால், கொரோனா தாக்கம் நீடிக்கும். எனவே, பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பண்டிகை காலங்களில் மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மக்களை காக்கவேண்டும் என்ற அரசின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like