#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா..!
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் இருந்த நிலையில், தற்போது அவர் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.