1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை..!

1

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு ஒன்றில் 22 ஆண்டுகளுக்கு பின் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. 2002ஆம் ஆண்டு திமுகவின் மாமன்ற தலைவராக இருந்தவர் மா.சுப்பிரமணியன். அந்த நேரத்தில் சென்னையின் மேயராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். இதன்பின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்ததால், மு.க.ஸ்டாலின் வகித்து வந்த மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்எல்ஏ பதவியில் தொடர்ந்தார்.

 

இதன் காரணமாக சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன், பொறுப்பு மேயராக செயல்பட்டார். இந்த நிலையில் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் மாமன்ற கூட்டம் கூடிய போது, திமுக சார்பாக கண்ணப்பர் திடல் மீன் அங்காடி தொடர்புடைய டெண்டர் பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தின் போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட, அது ஒருக்கட்டத்தில் மோதலாக மாறியது. அப்போது அங்கிருந்த மைக், நாற்காலிகள் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. அதில் அதிமுகவின் கவுன்சிலர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, குமாரி, மங்கையர்க்கரசி உள்ளிட்டோருக்கு தலை, கைகளில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக சுகுமார் பாபு, மாமன்ற செயலர் ரீட்டா உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.

 

இந்த புகார் அடிப்படையில் அப்போதைய மா.சுப்பிரமணியன், சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், மூர்த்தி, வி.எஸ்.பாபு உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கிட்டதட்ட 70க்கும் அதிகமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வழக்குத் தொடரப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதை முன்னிட்டு, மா. சுப்பிரமணியன் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகியிருந்தார்.

நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், நீதிக்காக கடந்த 22 ஆண்டுகளாக நீதிமன்றத்தின் படிகட்டுகளில் ஏறி இறங்கினோம், இன்று நீதி கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்

Trending News

Latest News

You May Like