#BREAKING : அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி....!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனை திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
திமுக வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்தார். அப்போது, துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் அவர் மயங்கிய நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.