#BREAKING: மிலாடி நபி தேதி அறிவிப்பு..!
இறை தூதர் முகமது நபிகள் பிறந்த நாளை மீலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
பிறை தெரிவது பொருத்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் இந்த மீலாது நபி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று (ஆக.24) பிறை தெரிந்ததால் வரும் செப்.5ம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார். முகம்மது நபி கிபி 570ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் 3வது மாதத்தின் 12ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார்.