#BREAKING : திமுகவில் இணைந்தார் மருது அழகுராஜ்..!
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், நமது நாளிதழில் முன்னாள் ஆசிரியமான மருது அழகுராஜ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தானே அதிமுக உரிமை மீட்பு குழுவில் இணைந்து பணியாற்ற நிலையில் ஓபிஎஸ் மீதும் அதிருப்தியில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்ட மருது அழகுராஜ், நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் 2018 முதல் 2022 வரை தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.
அண்ணா அறிவாலயத்தில் மருது அழகுராஜ் பேட்டி
எடப்பாடி அவமதிப்பு அரசியலை செய்கிறார். அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைப்பு அரசியலில் இணைந்துள்ளேன். திமுகவில் உழைக்க வந்துள்ளேன்; இன்னும் பலபேர் திமுகவில் இணைய உள்ளனர்
.png)