1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையா தூக்கிலிடப்பட்டார்..!!

Q

2011ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகிதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தி காத்தையாயும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் எனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயற்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது.

இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.

இந்நிலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக அவரது தண்டனை ஒத்தி வைக்க முடிவு செய்த போதிலும், நேற்று மாலை (25) சிங்கப்பூர் நீதிமன்ற பணிப்புரையின் கீழ் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like