#BREAKING : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு..!
மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் கடந்த 14-ம் தேதி நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். டெல்லியில் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மக்களவை தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை மார்ச் 16-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும். தேர்தல் ஆணையத்தின் சமூக வலைதளங்களில் இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. ஜம்மு – காஷ்மீரில் மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசியதாவது, 2024 மக்களவை தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் 1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் .நாடு முழுவுடும் 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன .மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 96,88,21,926.ஆண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை - 49,72,31,994 பெண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை - 47,15,41,8888 3 -ம் பாலினம் வாக்காளர்கள் எண்ணிக்கை - 48,044.இளைஞர்கள் - 19.74 கோடி..85 வயது மேல் உள்ளவர்கள் 82 லட்சம் பேர் உள்ளனர் 88.40 லட்சம் மாற்று திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர்
ஏப்ரல் 1 ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி...85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்த வாக்களிக்கலாம் .
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல்...ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை...தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைகிறது.வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி... தமிழ்நாட்டில் வேட்புமனுக்களை திரும்பி பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 30 ஆம் தேதி