#BREAKING தமிழகத்தில் 60க்கும் கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு!!

தமிழகத்தில் ஒரே நாளில் 53 பேர் பலியானதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,434 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தினந்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். தொடக்கத்தில் உயிரிழப்பு குறைவாக பாதிவாகி வந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 2,992 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர திருவள்ளூர், மதுரை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதத்தில் உயிரிழப்பு இருமடங்காக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.